தமிழ் மக்களின் உரிமைக்காக இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் கடந்த 15.09.2023 அன்று எழுச்சியுடன் ஆரம்பானது இந்நிலையில் தியாக தீபத்தின் பன்னிருநாள் வரலாற்றை நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவு தூபி அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
குறித்த வரலாற்று விழுமியங்களை பெரியவர்கள் தொடக்கம் தமிழனத்தின் இளையதலைமுறையினர் வரையிலும் ஆர்வத்தோடு படித்து தியாக தீபத்தின் அகிம்சை போர் குறித்து ஆர்வத்துடன் அறிந்துகொள்ள முனைப்புக்காட்டுவது உலகிற்கு ஒன்றை எடுத்தியம்புகின்றது தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்கள் அன்று சொன்ன சிந்தனையின் படி எம் எதிர்கால சந்ததி வாழ நிச்சயமாக எமக்கோர் நாடு அவசியம். இல்லாவிட்டால் எங்களைப்போலதான் நாளை எமது எதிர்கால சந்ததி துன்பப்படுவதோடு அடக்குமுறைக்குள் வாழும் என்று அன்று திலீபன் சொன்ன சிந்தனையை கருத்தில் கொண்டு தமிழர்கள் மீண்டெழுவோம் என்பதை சொல்கிறது.