அகிம்சையில் தமிழீழ விடுதலைக்காக போராடி உண்ணாவிரதம் இருந்து உயிரீந்த தியாக தீபம் திலீபனின் எட்டாவது நினைவு நாளில் அவரின் நினைவு சுமந்து பிரான்சு வாழ் தமிழீழ தேசப்பற்றாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் பி. பகல் 3.00 மணிக்கு ஈகைச்சுடர், அகவணக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது.
எம் மாவீரச்செல்வங்களும், மக்களும் கொடுத்த உன்னத உயிர் விலைதான் நீறுபூத்த நெருப்பாக தமிழர்கள் வாழும் இடமெல்லாம் நின்று கொண்டேயிருக்கின்றது. ‘ மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும்’ என்ற திலீபனின் ஆள்மன வெளிப்பாடும், செயற்பாடும் தாயகத்திலும், புலத்திலும் மக்களை பற்றி நிற்கின்றது. இதனை பொறுக்க முடியாத சிங்கள பௌத்த பேரினவாதமும், அதன் அரசும் மீண்டும் கொலைக்கரம் கொண்டு அழிக்க நினைப்பதன் ஓர் செயற்பாடே 17 ஆம் நாள் அமைதிவழியில் போராடி உயிர் நீத்த திலீபனின் 36 ஆவது ஆண்டு நீங்காத நினைவுகளையும், உணர்வுகளையும் நெஞ்சிலே சுமந்து அமைதிவழியிலே சென்ற திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியையும், அதனை நடாத்திவந்தவர்களான மக்களுக்காக இன விடுதலைக்காக சனநாயவழியில் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் பொதுமக்கள் சிங்கள அரசின் காவல்துறையின் துணையுடன் குண்டர்கள் படையால் கோழைத்தனமாக அடித்து நொருக்கப்பட்டு, வன்முறைகளை நடாத்தினர்.
அதனை கண்டித்து அதனை பிரெஞ்சு அரசுக்கு தெரிவிக்கும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. லாக்கூர்நோவ் மாநகர ஆலோசகர் திரு. அந்தோனி றூசெல் மற்றும் மக்கள் பேரவை, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள் கண்டன உரைகளையும், பிரெஞ்சு தேசமும், சர்வதேசமும் சிங்கள் அரசின் பொய்யான பரப்புரைகளுக்கு துணைபோகாது நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டனர். பிரெஞ்சு மொழியிலும் கருத்துக்கள் பகிரப்பட்டது.
ஊடகப்பிரிவு – மக்கள் தொடர்பு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு