8 ஆம் நாளாகிய  இன்றைய நாளில் யாழ்ப்பாணத்தில் அராலி , வட்டுக்கோட்டைப் பகுதிகளில் பயணிக்கும் தியாக தீபம் ஊர்திப்பவனி!

0
78

பேரினவாத  சிங்கள அரசின் அடக்குமுறையை ஊடறுத்து  பேரெழுச்சியுடன்  பயணிக்கும்  திலீபன்  ஊர்திப்பவனி.  

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி  தடைகளை உடைத்து  புதிய மிடுக்குடன் மாங்குளம் ஊடக கிளிநொச்சி நகரை நோக்கி சென்றது இந்நிலையில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலின்  5 ஆம் நாள்  (19.09.2023) கிளிநொச்சியில்   வட்டகச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் தொடங்கியது 

இதன்  போது  தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி முன் தமிழீழத்தின் எதிர்கால சிற்பிகளான  மாணவர்கள் தியாக தீபம் திலீபனை    நினைவேந்தினார்கள். 

கிளிநொச்சி பள்ளி மாணவர்களின் நினைவேந்தலிற்கு பிறகு   தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் ஊர்திப்பவனி  பரந்தனூடாக முல்லைத்தீவை நோக்கி பயணித்தது 

6 ஆம் நாளாகிய  நேற்று  முன்தினம் (20.09.2023)   வவுனியா   பல்கலைக்கழக மாணவர்கள்  அலையலையாய் திரண்டு   தியாக தீபம் திலீபனை நினைவேந்தினார்கள் பின்னர்   ஊர்திப் பவனி தனது  பயணத்தை தொடர்ந்து 

7 ஆம் நாளாகிய  நேற்று நாளில் ( 21.09.2023 )   தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பேரெழுச்சியுடன்    மன்னார்   பயணித்த வேளையில் பெருந்திரளான   மக்கள்  தியாக தீபத்தை   நினைவேந்தி   உறுதியேற்ற நிலையில்   மன்னார்  ஊடாக   மல்லாவி பயணித்த வேலை 2009 ம்  ஆண்டு முன் தமிழீழ  தனியரசு செயற்பட்ட காலத்தில் எவ்வாறு  பேரெழுச்சியுடன் காணப்பட்டதோ அதே போன்ற  பேரெழுச்சியுடன்  பெருந்திரளாய் மக்கள்  மல்லாவியில்  நினைவேந்தி  வருவதாக தாரகம் தமிழ்த் தேசிய ஊடகத்திற்கு தகவல்கள் வருகின்றன .​

குறித்த பேரெழுச்சி மீண்டும் உலகிற்கு ஒன்றை  எடுத்தியம்புகின்றது தமிழீழ தனியரசு ஒன்றே தமிழர்களின் தீர்வாகும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது   

8 ஆம் நாளாகிய  இன்றைய நாளில் ( 22.09.2023 )    யாழ்ப்பாணத்தில் அராலி , வட்டுக்கோட்டைப் பகுதிகளில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here