தியாக தீபம் அவர்களின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் தியாகதீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்களக் காடையர்களினால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியாவை வந்தடைந்த குறித்த ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழீழ விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்வதாகவும் காரணம் காட்டி குறித்த ஊர்திப் பவனிக்கு சிங்கள பொலிசார் தடை கோரிய நிலையில்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகோரிய சிங்கள பொலிசாரின் வழக்கை நிராகரித்தது நீதிமன்று தியாக தீபம் திலீபன் அவர்கள் உலகிற்கு சனநாயகத்தின் உச்சத்தை போதித்த ஒருவர் ஆகவே தியாக தீபம் லெப் கேணல் திலீபன் காட்டிய வழியில் ஊர்திப்பவனி தொடர்ந்தும் பவனி வரும் பேரெழுச்சியுடன் நடைபெறும்
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்யப் போவதாக கூறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் கஜேந்திரன் உட்பட்ட நபர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத பொலீசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது இந்த வழக்கிலே நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்வதற்கான எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை எங்கள் தரப்பு நியாயங்களை நாங்கள் எடுத்துரைத்திருந்தோம் நீதிமன்றம் தற்சமயம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளார் சட்டத்தரணி க.சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.