தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 2023.09.18 இன்று பி.ப 2:15 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஐரோப்பிய வாழ்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலோடு தங்களின் கோரிக்கையை சர்வதேசத்திடம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த பேரணியில் சிங்கள பேரினவாத அரசின் சனாதிபதி இனப்படுகொலை என்றும் ,we want tamil eelam , எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் என்றும் ஐ நா முன்றலில் விண்ணதிர சர்வதேசத்தின் காதுகளுக்கு கேட்க்கும் படி தமிழர்கள் முழங்கிகொண்டு வருகிறார்கள்.
“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”
என்கின்ற தமிழீழத் தேசிய தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக ,தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் பேரெழுச்சி கொண்டு ,தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் “மக்கள் புரட்சி “ என்ற உன்னத வேண்டுகையை நெஞ்சிருத்தி நீதிக்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.