தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி அடக்குமுறைக்கு மண்டியிடாமல் மிடுக்குடன் முல்லைத்தீவு நோக்கி.!

0
87

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 4ஆம் நாளாகிய இன்று ,பொத்துவில் தொடங்கி நல்லூர் வரையான திருவுருவப் படம் தாங்கிய நினைவூர்தி திருகோணமலை மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை,கப்பல்துறைப்பகுதியில் வைத்து, சிறிலங்கா புலனாய்வாளர்களும் காடையர்களும் இணைந்து  ஊர்தி மற்றும் திருவுருவப்படம் என்பவற்றினை அடித்து நொறுக்கியதோடு, ஊர்தியின் சாரதி மற்றும் உடன்பயணித்தோர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இவற்றினை தாண்டி திருகோணமலையிலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு இன்று அதிகாலை ஊர்தி வந்துசேர்ந்தது.

திருகோணமலையில்  நேற்று (17092023 ) தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மீது    பேரினவாத காடையர்குழு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ஊர்திப்பவனி கப்பல்துறை முக சந்திக்கருகில் சென்றவேளை முதலாவதாக கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.அதனைத் தொடர்ந்து சர்தாபுர சந்தியில் வாகனங்கள் மீதும் தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை பிரதேசத்தில் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு இலக்கான தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவூர்தி  வட தமிழீழம் வவுனியாவை வந்தடைந்துள்ளது.

ஊர்திப் பவனியில் பங்கெடுத்து தாக்குதலுக்குட்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினரும் வவுனியாவை வந்தடைந்தனர்.

சிறிலங்காப் புலனாய்வாளர்களால் சிதைக்கப்பட்ட ஊர்தி, மீள் ஒழுங்கமைக்கப்பட்டு  புதிய மிடுக்குடன் மாங்குளம் ஊடக கிளிநொச்சி நகரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.இன்றுஇரவு கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here