அகிம்சையை போதித்த அகிம்சாவாதிக்கே இந்த நிலை!

0
193

அகிம்சையை போதித்த
அகிம்சாவாதிக்கே இந்த நிலை
நெஞ்சு பொறுக்குதில்லையே

சிங்களக்காடையர்களே உங்களுக்கு
நாம் பதில் சொல்லும் நாள்
வந்தே தீரும்

இந்தத்தீவில் எப்போதும் நாம் பதுகாப்பாக வாழ முடியாது எம்மையும் எம்மக்களையும்
பாதுகாப்பதற்கான ஒரே தீர்வு
சுதந்திரத் தமிழீழமே!

ஓர் இனத்தின் பிரதிநிதி இன்னொரு இனத்தவரால் தாக்கப்படுவது அவர் சார்ந்த இனத்தைத் தாக்குவதற்கு சமன்.
பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அண்ணன் தாக்கப்பட்டது எங்கள் மீது விழுந்த அடியாகக் கருதவேண்டும் இத்தனை அழிவுகளையும் செய்துவிட்டு நாங்கள் முன்னெடுக்கும் அறவழிப் போராட்டங்களைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாத சிங்கள தேசம் எப்படி எங்கள் உரிமைகளையும் அபிலாசைகளையும் ஏற்றுக்கொள்ளும்.

சிங்கள ஆட்சியாளர்களை வீடுகளில் அழைத்து விருந்து வைக்கும் எங்களின் கோமாளிகளும் பச்சோந்திகளுக்கும் மத்தியில் தனி மனிதனாக ஒரு உணர்வுள்ள தமிழனாக அண்ணன் கஜேந்திரன் மீது விழுந்த அடி நிச்சயமாக ஒரு செய்தியைத் தெளிவாக சொல்கின்றது.
இலங்கைத்தீவில் நிராயுதபாணிகளாக தமிழர்கள் வாழ்வது சாத்தியமற்ற ஒன்றாகவே சிந்திக்கவைக்கின்றது.

ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்ற முடியாத காவல்துறை சாதாரண மக்களை எப்படிப் பாதுகாக்கும்.
இடுப்பில் உள்ள துப்பாக்கி வானத்தை நோக்கி சுட்டால் நிச்சயம் கூட்டம் கலைந்திருக்கும்.
எங்களுக்கு நடந்த அநீதிகளும் அழிவுகளும் சிங்கள காவல்த்துறையின்
முன்னே அவர்கள் ஆதரவோடு நிகழ்த்தப்படுவதுதான் வரலாறு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here