பிரான்சில் நாளை 7வது ஆண்டாக இடம்பெறும் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு!

0
151

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழியல் இளங்கலைமாணிப் (BA) பட்டகர்களால் நடாத்தப்படும் தியாகதீபம் திலீபன் அறிவாய்தல் அரங்கு ஏழாவது ஆண்டாக எதிர்வரும் *செப்டம்பர் 17 அன்று, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 13.01 மணிக்கு Le Blanc Mesnil Ecole Jean Jaurès 15 Ave jean Bart 93150 Le blanc Mesnil * எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.


ஆய்வு இதழ் வெளியீடு :

பட்டகர்கள் பல்வேறுபட்ட தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றைத் தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பு இருந்த காலப்பகுதியில் அவரின் பெயரால் நடத்தப்படும் அறிவாய்தல் அரங்குகளில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் இந்த ஆய்வுக்கட்டுரைகள் தமிழ், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு ஆய்வுகளை மேற்கொண்ட பட்டகர்களில் பிரான்சில் பிறந்து தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ் பயின்று பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களும் அடங்குகின்றனர். இது தமிழ் இனம் சார்ந்த ஆய்வுத்தளத்தின் அறிவியல் பாய்ச்சலின் படிமலர்ச்சியாகக் கொள்ளப்படுகிறது.

அரசியல்,மொழி,பண்பாடு,குமுகம்,பெண்ணியல் தளங்களில் பன்மொழி அறிவுடைய இளையோரின் பங்களிப்பு எதிர்காலத்தில் முழுவீச்சுடன் இருப்பதற்கான முதற்புள்ளியாக இது கருதப்படுகிறது.மேலும், இவ்வாண்டு Le Blanc Mesnil நகரசபையின் ஆதரவுடனும் தமிழ்ச்சங்கத்தின் ஒத்துழைப்புடனும் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here