இன்று 16/09/2023 பிறிபேர்க்கில் அகவணக்கத்தோடு தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின்நினைவை நெஞ்சில் சுமந்து. ஆரம்பித்த அறவழி ஈருருளி பயணம், தமிழீழத்தில்
சிறிலங்கா பேரினவாத அரசானது தமிழர்களை இரசாயன, கொத்துக்குண்டுகளாலும், பாதுகாப்பு வலயத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்தும், வெள்ளைக்கொடிகளோடு சரணடைந்தவர்களை படுகொலை செய்தும், வயது பால் வேறுபாடுகளின்றி திட்டமிட்டமுறையில் உணவு ,மருந்துகள் மறுத்த நிலையிலும் இனப்படுகொலை செய்து அதற்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கும் நோக்கில் பல கபட நாடகங்களையாடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிறிலங்காப் பேரினவாத அரசு புரிந்த தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தமிழர்களுடைய தாயகமாம் தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளோடு ,ஐரோப்பிய நாடுகளை சந்தித்து மனித நேய ஈருருளிப்பயணம் மேற்கொள்வோர்களால் மனு ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக 27வது தடவையாக பயணித்து வரும் இப்போராட்டம் நேற்று 15/09/2023 பேர்ன், மாநகரத்தில் சுவிஸ் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பை மேற் கொண்டதுடன் சம நேரத்தில் முதல்வரினையும் சந்தித்து மனு ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று 16/09/2023 பிறிபோர்க் மாநகர மக்களை சந்தித்து தம் அனுபவங்களை பகிர்ந்தபின் லவுசான் மாநகரம் நோக்கி தமது அறவழிப் போராட்டத்தினை தொடர்ந்தனர்.
நாளை மீண்டும் இப்போராட்டம் ஜெனிவா மாநகரத்தினை நோக்கி பயணித்து ஐக்கிய நாடுகள் அவை முன்றலினை வந்தடைந்து ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெற இருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றது.
“சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது.”
– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”