மனித உரிமைகள் ஆணையகத்தின் 54 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் தமிழினத்தின் 74 வருடகால வலிகளை தமது கால்களிலும், உடலிலும், உணர்விலும் சுமந்து ஐரோப்பிய நாடுகளுடாக பயணிக்கும் வேளை 09 செப்ரெம்பர் பிரான்சு நாட்டிற்கு வரும் ஈருருளி பயணப்போராட்டம் 10 ம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பிரான்சு நாட்டில் பல மாநகரங்களுடாக பயணித்து ஐரோப்பிய பாராளுமன்றம் அடைந்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள், பிரெஞ்சு மக்களுக்கும் தமிழீழ மக்களின் வலிகளை கூறியும், பயணிக்கவுள்ளது.
அன்பான பிரெஞ்சு வாழ் உணர்வான தமிழீழ மக்களே! 3 நாட்கள் காலப்பகுதியில் ஈருருளி சனநாயகப் போராட்ட உணர்வாளர்களுடன் இணைந்து குரல் கொடுப்போம் வாரீர்.