பிணைவழங்கும் முடிவை கைதிகள் நிராகரிப்பு நாளை முதல் போராட்டத்தில் குதிப்பதற்கு முஸ்தீபு!

0
253

aaaa-prisonநீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எமது விடு­தலை தொடர்­பான கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தோடு வழங்கப்பட்ட வாக்­கு­று­தி­களும் குறித்த கால­வ­ரையில் நிறை­வேற்­றப்­ப­டா­மையால் எமது விடு­த­லையை வலி­யு­றுத்தும் வகையில் இடை­நி­றுத்­திய உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை நாளை முதல்­தொ­ட­ரப்­போ­கின்­றோ­மென நாட­ளா­விய ரீதியில் உள்ள 14 சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 217 தமிழ்

அர­சியல் கைதிகள் அறி­வித்­துள்­ளனர்.

எமது விடு­தலை தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வாக்­கு­று­தி­யோடு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் வழங்­கிய உறுதி

மொழிக்கு அமை­வா­கவே கடந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்­பித்த சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை 17ஆம் திகதி தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தி­யி­ருந்தோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இது தொடர்­பாக அவர்­க­ளது உற­வுகள் கருத்து வெளியி­டு­கையில்,

நாட்டில் பயங்­க­ர­வா­தச்­சட்டம் மற்றும் அவ­ச­ர­கா­லச்­சட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்டு அச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை பல்­வேறு தட­வை­களில் கோரி­யி­ருந்­த­போதும் அக்­கோ­ரிக்­கைகள் அந்­தந்த காலத்தில் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­ட­னவே தவிர எமது உற­வு­க­ளுக்­கான தீர்­வுகள் எவையும் வழங்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில் நாட்டில் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தி நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­க­மொன்று கடந்த ஜன­வரி மாதம் 8ஆம் திகதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் இடம்­பெற்ற பொதுத்­தேர்­த­லிலும் மீண்டும் புதிய அர­சாங்கம் ஆட்­சிப்­பீ­ட­மே­றி­யது.

இப்­பு­திய மாற்­ற­மா­னது நீண்­ட­க­மாக எம்மை விட்டுப் பிரிந்­தி­ருக்கும் எம் உற­வு­களை மீண்டும் எம்­முடன் இணைந்து வாழ்­வ­தற்­கான சூழலை ஏற்­ப­டுத்தும் எனப் பாரிய நம்­பிக்கை கொண்­டி­ருந்தோம். எனினும் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று இற்­றைக்கு ஆறு­மா­தங்கள் உருண்­டோ­டி யி­ருக்கும் நிலையில் எம் உ­ற­வு­களின் விடு­தலை தொடர்­பாக எந்­த­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இந்­நி­லை­யி­லேயே அவர்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி உற­வு­க­ளுடன் வாழ்­வ­தற்கு வழி­விட்டு பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­த­லை­ய­ளிங்கள் என்ற கோரிக்­கையை முன்­வைத்து உயிர் துறக்கும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தனர். எனினும் ஐந்து தினங்கள் கடந்த நிலையில் பல்­வேறு கருத்­துக்­க­ளுக்கு மத்­தியில் ஒக்­டோபர் 31ஆம திகதி முதல் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு நவம்பர் 7ஆம் திக­திக்கு முன்­ன­தாக இவ்­வி­ட­யத்­திற்கு நிரந்­தர தீர்­வ­ளிக்­கப்­ப­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னு­ட­னான தொலை­பேசிக் கலந்­து­ரை­யா­டலில் வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார்.

எவ்வாறெனினும் நேற்று முன்­தினம் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான உயர்­மட்­டக்­கு­ழு­வி­னரை சந்­தித்­த­போது பகுதி பகு­தி­யாக பிணையில் விடு­த­லை­ய­ளிக்­கப்­ப­டு­வ­தா­கவே கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.

குறிப்­பாக திங்­கட்­கி­ழமை 30பேரும் 20ஆம் திக­திக்கு முன்­ன­தாக 32பேரும் பிணையில் விடு­த­லை­ய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளனர். 48பேர் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். அவர்­களின் விடு­தலை தொடர்­பாக ஜனா­தி­ப­தியே இறுதி தீர்­மானம் எடுக்­க­வேண்டும். ஏனை­யோரின் விடு­த­லை­தொ­டர்பில் ஆராய்­வ­தற்கு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துடன் அமைச்­ச­ரவை குழு­வொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அக்­கு­ழு­வா­னது அவர்­களின் விடு­தலை தொடர்­பாக விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளது என்றே தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை எம்மால் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. ஜன­நா­யக ரீதி­யாக நல்­லாட்­சி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் தண்­டனைக் காலத்தை விடவும் அதி­க­மாக சிறைக்­கூ­டங்­களில் வாடும் எமது உற­வு­களை எம்­முடன் இணை­யுங்கள் என்றே கோரு­கின்றோம். எமது பிள்­ளைகள் குடும்­பங்கள் அவர்கள் இல்­லா­மையால் வறு­மையின் கோரத்­திற்குள் துவண்­டு­கொண்­டி­ருக்­கின்­றது. இவ்­வா­றான நிலைமை தொட­ரு­மானால் எதிர்­கா­லத்தில் என்­ன­செய்­வ­தென்ற நிலை­மையே உரு­வா­கின்­றது. எவ்­வாறு வாழ்க்­கையை கொண்டு செல்­வ­தென்ற கேள்­வியே எழு­கின்­றது.

ஆகவே எமது உற­வு­களின் விடு­தலை சட்ட நுணுக்­கங்கள் உள்­ளிட்ட வேறு­பல கார­ணங்­களை காட்டி விடு­த­லையை தம­தப்­ப­டுத்­து­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் கிளர்ச்­சியில் ஈடு­பட்­ட­போது அவர்­களை கைது செய்து சிறை­களில் அடைத்­தார்கள். பின்னர் அவர்­களை விடு­தலை செய்யும் போது சிறு­குற்­ற­மி­ழைத்­த­வர்கள், பெருங்­குற்­ற­மி­ழைத்­த­வர்கள் நடுத்­த­ரக்­குற்­ற­மி­ழைத்­த­வர்கள் என வகைப்­ப­டுத்­தாது ஒட்­டு­மொத்­த­மாக பொது­மன்­னிப்­ப­ளித்தே விடு­தலை செய்­தார்கள்.

உலகின் எந்­த­வொரு நாட்­டிலும் போதைப்­பொருள் கடத்­து­வது மர­ண­தண்­டனை விதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­ள­வுக்கு பாரிய குற்­ற­மாக காணப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கையில் போதைப்­பொருள் கடத்­திய குற்­றச்­சாட்டில் மர­ண­தண்­டனை வழங்­கப்­பட்ட இந்­திய மீன­வர்­க­ளுக்கு ஜனா­தி­பதி மன்­னிப்­ப­ளித்­தி­ருக்­கின்றார். மேலும் யுத்­தத்தில் நேர­டி­யாக தொடர்பு பட்ட 12ஆயிரம் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளித்து முன்னாள் போர­ளிகள் என்ற புதிய பெய­ருடன் சமு­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான செயற்­பா­டுகள் இந்த நாட்டில் நிகழ்ந்­துள்ள நிலையில் வெறு­மனே சந்­கேத்தின் பேரிலும், சிறு குற்­றச்­சாட்­டுக்­க­ளு­டனும் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள எமது உற­வு­க­ளுக்கு ஏன் பொது மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்­ய­மு­டி­யாது எனக் கேள்­வி­யெ­ழுப்­பினர்.

கூட்­ட­மைப்­பிடம் கோரிக்கை

எமது விடு­தலை தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தேர்தல் காலத்தில் மேடை­யாக பேசி­னார்கள். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்­டி­ருந்­தார்கள். அதற்கும் சேர்த்தே நாம் வாக்­க­ளித்தோம். தற்­போது வடக்கு கிழக்கை சேர்ந்த 16பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபையில் உள்­ளனர்.

எமது உற­வு­களின் விடு­தலை தொடர்­பாக கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை இவர்கள் மேற்­கொண்­டி­ருந்­தார்கள். ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்கள். எமது உற­வு­களை நேரில் சென்று பார்த்து உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­யி­ருந்­தார்கள். இவை அனைத்­தையும் நாம் வர­வேற்­கின்றோம்.

எனினும் எமது உற­வு­களின் விடு­த­லையை அழுத்­த­மாக தற்­போ­து­வ­ரையில் வலி­யு­றுத்­த­வில்­லை­யென்ற கருத்து எம்­மி­டத்தில் எழுக்­கின்­றது. காரணம் 16பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பகு­தி­ப­கு­தி­யாக பிணையில் விடு­த­லை­ய­ளிப்­பது என்ற கருத்தை அர­சாங்கம் முன்­வைத்­தி­ருந்த போது அதனை நிரா­க­ரித்­தி­ருக்­க­வேண்டும். மக்கள் எதற்­காக ஆணை வழங்­கி­னார்கள் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருக்­க­வேண்டும். ஆகக்­கு­றைந்­தது எமது உறவுகளின் விடுதலைக்கு மாற்று வழியொன்றையாவது முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும் அவ்வாறில்லாது மென்போக்குடன்செயற்பட்டமையானது எமக்கு கவலையளிப்பதாக உள்ளது.

அனைவரும் ஆதரவளியுங்கள்

நல்லாட்சி தொடர்பாக பேசும் அரசாங்கம் எமது உறவுகள் அனைவரையும் தடுத்து வைப்பதை தொடராது உடன் விடுதலையளிக்கவேண்டும் என்பதை அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சர்வமதக் குழுக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு வலியுறுத்தல்களை செய்ய வேண்டும். சிறைகளில் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவுள்ள எமது உறவுகளுக்கு ஆதரவாக இன, மத, மொழி, அரசியல் பேதங்களை மறந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றனர்.

Search Resultclose
Image Galleryclose

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here