தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 5 நாள் போராட்டம்.
31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி, ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் நாட்டை ஊடறுத்து பெல்சியம் நாட்டைச் சென்றடைந்துள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது. அந்தவகையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேவையின் 54வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், எமது நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம் இன்று (04.09.2023) பெல்சியம் நாட்டில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது அதனை தொடர்ந்து புர்க்சலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பு தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்று தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது
மேலும் இன்றைய நாளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பு நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்தில் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று முழக்கம் எழுப்பப்பட்டது.
எதிர்வரும் 54 வது மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலே வாழிட நாடுகள் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை அவசியம் என்னும் நிலைப்பாட்டினை ஏற்க நாம் அயராது போராட வேண்டும், அதற்கமைய எம் உறவுகளே உங்களுடைய வாழிட நாடுகளை எமது நியாயமான கோரிக்கை செவிசாய்க்க வைப்பது எம் அனைவரினதும் வரலாற்று கடமையாகும் எனவே எம் விடுதலைப் பங்களிப்பினை ஆற்ற வாருங்கள்.