நெதர்லாந்தில் மிக சிறப்பாக நடைபெற்ற மாபெரும் தமிழர் விளையாட்டு விழா – 2023 | படங்கள் இணைப்பு!

0
57

நெதர்லாந்துத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், நெதர்லாந்துத் தமிழர் விளையாட்டு ஒன்றியமும் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா 02-09-2023 சனி அன்று Utrecht Nieuwegein என்னுமிடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

சுமார் 09.30 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு,  தமிழீழத் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, பின் ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம் மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து 10.00 மணியளவில் ஆண்கள் பெண்களுக்கான உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது. அத்துடன் சிறுவர் சிறுமியர்களுக்கான ஓட்டங்கள், பந்தெறிதல், குண்டெறிதல், நீளம்பாய்தல் தேசிக்காய்க் கரண்டி ஓட்டம், ஆண்கள் பெண்களிற்கான விளையாட்டுக்கள். மற்றும் எமது தாயக விளையாட்டுக்களான, கிளித்தட்டு, முட்டிஉடைத்தல், சங்கீதக்கதிரை என்பனவும் இடம்பெற்றன.

 மக்களின் ஆரவாரங்களுடன் சிறப்புற நடைபெற்ற இவ் விளையாட்டு விழா வெற்றி பெற்ற கழகங்களுக்கும் , வீரவீராங்கனைகளுக்கும் மக்களின் கரகோசங்களுடன் வெற்றிக் கேடையங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் சுமார் 20:30மணியளவில் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற கோசத்துடன் இனிதேநிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here