தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 4 ம் நாள் போராட்டம்.
31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி, ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தில் நாட்டை ஊடறுத்து பெல்சியம் நாட்டைச் சென்றடைந்துள்ளது.
2009ம் ஆண்டு தமிழீழ தேசத்தில் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதும் தமிழர்களின் போராட்ட வடிவம் இக்கால கட்டத்தின் தேவைப்படி அறவழிக்களமாக உருப்பெற்றது. அந்தவகையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேவையின் 54வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், எமது நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணம் நேற்று (03.09.2023)நெதர்லாந்தின் ஊடாக பயணித்து பிறேடா மாநகரிலிருந்து காலை அகவணக்கத்துடன் ஆரம்பித்து, மக்கள் பேராதரவோடு எழுச்சிப் பயணத்தினை தொடர்ந்து மாலை பெல்சியம் நாட்டின் மாவீரர் நினைவிடத்தில் நிறைந்துள்ளது.
மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டத்தில் கலந்துகொண்டு மனித நேய செயற்பாட்டாளர்களுக்கு மக்கள் ஒன்றிணைந்து எழுச்சியோடு வரவேற்கவேண்டுமென உரிமையோடு அழைக்கிறோம்.