குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழ் மக்களால் இன்றையதினம் பொங்கல் வழிபாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு சிங்கள் மக்கள், பௌத்த பிக்குகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இருப்பினும் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்படும் நிலையில் நேற்றையதினமே குறித்த பகுதிக்கு சுமார் 30 வரையான சிங்கள மக்கள் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை நூற்றுக்கணக்கான சிறிலங்கா காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர், 3 பேருந்துகள் மற்றும் 2 டிரக் வாகனங்களில் குருந்தூர் மலை நோக்கி படையெடுத்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.