தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன் நேற்று திங்கட்கிழமை தமிழத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்
தடா சந்திரசேகரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் காலமானார் எனச் செய்திகள் வெளியாகின.
தடா சந்திரசேகரனின் மறைவு தமிழ்தேசிய ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.