கிளிநொச்சி தருமபுர காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் நேற்றையதினம்(15.08.2023) இரவு ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் என்னும் சிறுவன் படுத்துறங்கிய நிலையில் பாம்பு கடிக்கிலக்கானான்.
இந்நிலையில் உடனடியாக உறவினர்களால் சிறுவன் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பாட்டான். ஆயினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயகத்தில் கடும் வரட்சி நிலவும் காரணத்தால் விச ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை குறித்து வைத்தியர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.