காலத்தால் அழியாத ஈழத்தின் தேச உணர்வுப் பாடல்கள் தந்த “பூத்தகொடி” மறைந்தது!

0
279

ஈழத்தின் தேச உணர்வுப் பாடல்களைத் தந்த கணீர் என்ற குரலிற்குரிய பாடகர் சங்கீத கலாபூசணம் செல்லத்துரை குமாரசுவாமி (வரதன் ஆசிரியர்- வயது 72) அவர்கள் இன்று (16.08.2023) புதன்கிழமை இயற்கையெய்தினார்.

அவர் மறைந்தாலும் அவர் பாடிய பூத்தகொடி_பூக்கள் இன்றி தவிக்கின்றது ….உள்ளிட்ட உணர்வூட்டும் பாடல்கள் அவரை நினைவூட்டும்!.

வரதன் ஆசிரியரின் மறைவு குறித்து அவருடைய மாணவர்கள் விடுத்த இரங்கல் செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

காலத்தால் அழியாத நாயகன்
எங்கள் “பூத்தகொடி”

இசை ஆசிரியர்
இசைப் பேராசான் சங்கீதபூசணம் செல்லையா குமாரசாமி அவர்கள் (வரதன் சேர்)
காலத்தால் அழியாத நாயகன்
எங்கள் “பூத்தகொடி”

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் அவர் வீட்டிலும் கற்ற காலங்கள்
காலத்தால் கரையாத கோலங்கள்.

சீர்காழியின் உத்தம சீடன் இவர்.
இவரின் சீடர்கள் யாம் என்பதில் என்றும்
நமக்குப் பெருமை.

இறுதிக் காலங்களில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராகவும் பிரதி அதிபராகவும் SLEAS) இருந்தவர்.

தமிழீழத்தின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான திரு குமாரசுவாமி (வரதன் ஆசிரியர்) அவர்களுக்கு எனது ஆழ்மன அஞ்சலிகள்!

போரம்மா , நல்லூரின் வீதியெங்கும்,பூத்தகொடி,
கல்லறைக்குள்ளே என பல பாடல்கள் இன்றும்
எமக்குள்ளே உணர்வூட்டும் பாடல்கள்!
ஈர அஞ்சலிகள் 🙏🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here