முல்லைத்தீவு – செஞ்சோலையில் விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
உயிரிழந்த மாணவிகளுக்கு, எம்.கே. சிவாஜிலிங்கம் சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.