
மட்டு. வாகரையில் உந்துருளி
விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்
மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்..
இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் வாகரை
கமநல கேந்திர நிலையத்திற்கு முன்பாக
இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட
பால்சேனை நாகபுரத்தை சேர்ந்த
மகாலிங்கம் டயரூபன் (20 வயது)

என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதே ஊரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மிதுர்சன்
(20 வயது) விபத்தில் காயமடைந்த நிலையில்
வாகரை ஆதார வைத்தியசாலைக்கு
சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு
மேலதிக சிகிச்சைகளுக்காக வாழைச்சேனை
ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளார்.

இருவரும்_உந்துருளியில்,
வாகரைக்கு சென்று கொண்டிருந்த போது
தமது கட்டுப்பாட்டை இழந்து கம்பத்தில்
மோதி_விபத்துக்குள்ளாகியுள்ளனரர்..