
விலை உயர்ந்த சுவிஸ் மணிக்கூடுகளை விற்பனை செய்யும் நிறுவனமான பியாகெட் (Piaget) நகைகள் விற்பனை கடைய அமைந்துள்ள மத்திய பாரிசின் வென்டோம் பகுதியில் உள்ள Rue de la Paix இல் அமைந்துள்ள கடையில் இக்கொள்ளை நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் நடந்தது.
நடைபெற்ற கொள்ளையில் சுமார் 16.5 மில்லியன் டொலர் மதிப்புடைய விலை உயர்ந்த பொருட்களை ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் கொள்ளையடித்து நகைகளுடன் தப்பிச் சென்றதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், மூன்று சந்தேக நபர்களை காவல்துறை தேடி வருவதாகவும் இது திட்டமிட்ட கொள்ளை என்று கூறும் காவல்துறையினர் கூறுகின்றனர்.