கடும் மழையிலும் கைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த ந.ரவீந்திரன் (வயது 49) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார்.
திருகோணமலையைச் சேர்ந்த இவர் தொழில் நிமித்தம் புதுக்குடியிருப்பு வேணா-வில் பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்போது இவரது சடலம் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.