மாவீரர் லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவு சுமந்து அனைத்துலக ரீதியில் 15 ஆவது ஆண்டாக 29.07.2023 ( சனிக்கிழமை) நடாத்த ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியானது குறித்த நாளில் நடைபெறமாட்டாது என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் முதலில் அறியத்தருகின்றோம்.
அனைத்துலக ரீதியில் 15 ஆவது ஆண்டு நடாத்தப்படும் சுற்றுப்போட்டி என்பதால் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கழகங்கள், வீரர்கள் இதில் பங்கு பற்றி சிறப்பிக்க இருந்தமையால் அவர்களுக்கு ஏற்றவாறான மைதானங்கள் கடசிவரை அமையாதமையால் நாம் இப்போட்டியை மற்றொரு நாட்களில் நடாத்துவதற்கும், பின்தள்ளிப் போடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனாலும் திட்டமிட்டபடி இப்போட்டி எம்மால் நடாத்தப்படும் என்பதோடு அதன்காலம் நேரம், இடம் என்பன் அனைத்து நாடுகளுக்கும், கழகங்களுக்கும், வீரர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் பின்னர் அறியத் தரப்படும். இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்வதுடன் மீண்டும் நடாத்தப்படவுள்ள இப்போட்டிக்கு உங்கள் ஆதரவையும்இ ஒத்துழைப்பையும் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு – ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளனம்
தொலைபேசி-: 06 52 81 4053 – 06 51 74 5755 – 06 52 05 2898
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
01 48 22 01 75