பிராங்கோ நெவர் தமிழ்ச் சங்கமும், நெவர் தமிழ்ச் சோலையும் இணைந்து 23/07/2023 அன்று தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் 40 வது ஆண்டு “கறுப்பு யூலை” நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் நினைவுச்சுடரினை திரு.றொமியூலஸ் ககாறின் அவர்கள் ஏற்றி வைத்தார்.அதனை தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அடுத்து பொதுமக்கள் சுடர் வணக்கம் மலர்வணக்கம் செலுத்தினர்.
பின்னர் கறுப்பு யூலை கலவரம் தொடர்பாக எமது தேசிய தலைவரின் நேர்காணல் ஒலிவெட்டு ஒலிக்க விடப்பட்டது.இறுதியாக “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் கோசத்துடன் நிறைவு பெற்றது.