அனைவருக்கும் அன்பான வணக்கம்!
1983-ம் ஆண்டு யூலை மாதம் சிங்களப் பேரினவாத அரசாலும், சிங்கள இனவெறியர்களாலும் தமிழர்கள் மேல் நடாத்தப்பட்ட கொடூரங்களே “கறுப்பு யூலை” ஆகும். யூலை மாதத்தின் இறுதி நாட்களை நெருங்கும் வேளையில் கறுப்பு யூலையின் அவலங்களாக எமது மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டமை, நிர்வாணமாக்கப்பட்ட நினைவுகள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் எரித்து சாம்பலாக்கிய நினைவுகள் எம் கண் முன் இன்றும் வந்து செல்கின்றன. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏனைய கட்டமைப்புகளுடன் இணைந்து இன்று 23 ஆம் திகதி யூலை மாதம் பிற்பகல் 2:00 மணிக்கு பாரிசின் றீப்பப்ளிக் ( Place de la République ) என்னும் இடத்திலிருந்து கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமாகி லாச்சப்பல் வழியாக ஸ்ரேலிங்கிறாட்டை (Place de la Bataille de Stalingrad ) வந்தடைந்து முடிவில் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு அனைவரையும் முன்வந்து ஆதரவை வழங்குமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். இத்தகவலை உங்கள் சமூக வலைத்தளங்களிலும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றோம். அத்தோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் வருகையினையும் அன்றைய தினம் உறுதி செய்வது எங்களின் தேசியக்கடமையாகும்.
“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.’’ நன்றி – பரப்புரை பிரிவு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.