ஹவானா, டிச. 22_ அமெரிக்காவும் கியூபாவும் இரு நாடுகளுக்கு இடை யேயான தூதரக உறவுக ளைப் புதுப்பிக்க இருக்கும் நிலையில் நேற்று கியூபா அதிபர் ரஃபேல் காஸ்ட்ரோ அமெரிக்கா கியூபாவின் கம்யூனிச கொள்கைகளை மதிக்க வேண்டும் என்றார்.
இரு நாட்டிலும் இருந்து தத்தமது நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர்கள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நல்லிணக் கத்தை சீர்குலைக்க முயற் சிக்கலாம் எனவும் அவர் எச்சரித்தார்.
18 மாத ரகசியப் பேச்சு வார்த்தைக்கு பிறகு இரு நாடுகளும் கைதிகளைப் பரிமாற்றம் செய்ததையும், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஹவானாவில் தூதரகம் ஒன்றை திறக்க இருப்பதாக தெரிவித்ததும் இரு நாடுகளுக்கு இடை யேயான விரோதப் போக்கு மறைந்து வருவதையே காட்டுகிறது.
கியூபா மக்கள் அமெரிக்கா உட னான விரோதப் போக்கு முடிவடைந்ததை பெரும் வெற்றியாக நினைக்கிறார் கள். குறிப்பாக அமெரிக் காவில் உளவு வேலை பார்த்த மூன்று கியூபா புலனாய்வு அதிகாரிகளை விடுதலை செய்தது அந்நாட் டின் மீதான கியூபர்களின் நம்பிக்கையை அதிகரித்து உள்ளது.
அமெரிக்க அதிகாரி கள் வரும் ஜனவரி மாதம் கியூபாவிற்கு வருகை தரவிருக்கும் நிலையில், கியூபா அதிபர் காஸ்ட்ரோ பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஒபாமாவிடம் பேச ஆர்வமாயிருப்பதாக வும் அதே நேரம் கியூபா ஒரு போதும் தன் பொதுவு டமை தத்துவங்களை விட்டுக் கொடுக்காது என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.