கடந்த 09.07.1995 அன்று சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தினுள் அடைக்கலம் புகுந்திருந்த அப்பாவித்தமிழர்கள் மீது சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 150 வரையானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் நடைபெற்ற போது சிறிலங்காவின் ஜனாதிபதியாக சந்திரிகா பதவி வகித்திருந்தார்.
இன்று அப்படுகொலையின் 28வது நினைவேந்தல் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்டது.