தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று 01.11.2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு லாக்கூர்நெவ் மேரிக்கு அருகில் சு. ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் திரு உருவச்சிலை மற்றும் கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படம் அமைந்திருக்கும் இடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, லாக்கூர்நெவ் தமிழ்ச்சங்கம் மற்றும் லாக்கூர்நெவ் கலைக்கூடம் என்பவற்றின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரை லாக்கூர்நேவ் உதவிமேயர் ஏற்றிவைக்க சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் திரு உருவச்சிலை, திருஉருவப்படம் அவருடன் வீரச்சாவடைந்த 6 மாவீரர்களின் திருஉருவப்படம் மற்றும் கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படம் ஆகியவற்றின் முன்பாக அவர்களின் உரித்துடையோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து வரவேற்புரையை லாக்கூர்நேர் மாநகரசபை உறுப்பினர் திருமதி அகிலன் ஆற்றினார். தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம், கவிதை, பேச்சு, சிறப்புரைகள் இடம்பெற்றன.
லாக்கூர் நெவ் உதவி மேயர், 13 ஆம் பிரிவு அதிதி மற்றும் லாக்கூர்நெவ் மாநகரசபை உறுப்பினர் அந்தோனி ரூசல் ஆகியோர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் நினைவாக உரை நிகழ்த்தினர்.
தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் அனைத்துலக ஈழத்தமிழர் அவையின் வெளிவிவகாரத் தொடர்புப் பொறுப்பாளர் திருச்சோதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பெருமளவில் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது வணக்கத்தைச் செலுத்தினர்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு.
Home
சிறப்பு செய்திகள் பிரான்சு லாக்கூர்நெவ்வில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!