மூதுர் சேருவில பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த வெள்ள பாதுகாப்பு அணை உடைபெடுத்துள்ளதால், மூதூர் பிரதேசம் நீரில் மூழ்கும் அபாயம் எற்பட்டுள்ளது.
மகாவலி கங்கையிலிருந்து வரும் நீரின் அளவு அதிகரித்ததன் காரணமாகவே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மூதூரில், குறிப்பாக கங்குவேலி, படுகாடு, நிலாப்பொல உள்ளிட்ட வயல் பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளத்திற்கு பின்னர், வெள்ளப்பாதிப்பை தடுக்கும் நோக்கில் 60 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையே, இவ்வாறு உடைப்பெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.