மண்டைதீவு படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலின் 28 ஆண்டுகள் நிறைவு! 

0
295

தமிழீழ விடுதலைப் புலிகளால் மண்டைதீவு இராணுவ முகாம் தாக்கி அழிக்கப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் 1995 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்தியெட்டாம் நாள் அதிகாலை ஆகும்.

மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி.

மண்டைதீவு படைத்தளம் போராளிகளின் இலக்காக பல முறை தேர்வாகியது. அவ்வண்ணம் எதிரியின் ஆதிக்கமும், மக்களை பெரும் துன்பவியல் வாழ்விற்குள் தள்ளும் சில ஆறாத ரணங்களை எம்மக்களுக்கு அந்தப் படைத்தளம் கொடுத்தது.

எதிரிக்கு சில தேவைகளை பூர்த்தி செய்யவும், சில இராணுவ ஆக்கிரமிக்கும் தீவகத்தின் உள் பகுதிகளில் இருக்கும் சிறு சிறு எதிரி முகாம்கள் மற்றும் மினிமுகாம் போன்றவற்றுக்கும் முக்கியம் வாய்ந்த தளமாக மண்டைதீவு படைத்தளம் இருந்தது.

அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப் பகுதியிடமிருந்து சிறு நீர்ப் பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இரு மாதங்களே ஆகியிருந்தன. யாழ் குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் யாழ் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும்.

யாழ் குடாநாட்டின் மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.

மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ நடவடிக்கையின் பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.

இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட எட்டுப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.

திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான். இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான ‘இதயபூமி’ தாக்குதல் உள்ளது.

மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

இன்றும் அவ்வண்ணம் தான், ஆயினும் எம்மக்களின் நிலங்களும் அங்கு அபகரிக்கப்பட்டு அதன் கடல்வளங்களும் சிங்கள அரசால் சூறையாடிய அழிக்கப்பட்ட வண்ணம் இருப்பது வேதனைக்குரிய விடயம்.

தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ் குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here