
பிரான்சு கொத்தசூர் தமிழ்ச்சங்கம் வோசோலை தமிழ்ச்சோலை, நீஸ் தமிழ்ச்சோலை இணைந்து நடாத்திய 18 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை நீஸ் நகரத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மங்கள விளக்கேற்றப்பட்டு, அகவணக்கத்தோடு ஆரம்பமான இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு, ஆசிரியர்கள் மற்றும் வளர்தமிழ் 12 நிறைவுசெய்த மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாக உறுப்பினர் தெரிவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்ச்சங்க, தமிழ்ச்சோலை, நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)