பிரான்சு பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக் கல்லூரியில் 2022/2023 கல்வி ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று (24.06.2023) சனிக்கிழமை நண்பகல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதம நிர்வாகி திரு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருக்குறள் மற்றும் ஏனைய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்,வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான மதிப்பளித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர், பரப்புரைப் பொறுப்பாளர், நிர்வாகப்பொறுப்பாளர்,செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், சோதியா கலைக்கல்லூரி நிர்வாகிகள் வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் சோதியா கலைக்கல்லூரி பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைகளில் முதன்மையானதும், முன்னிலையில் இருந்து வருவதுமான இக்கல்லூரியின் பெயருக்கு ஏற்றவாறு கல்லூரி தொடர்ந்தும் பல ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்று அதற்குப் பலமாக பிள்ளைகளும், பெற்றோர்களும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.




















(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)