
ரஸ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த வாக்னர் கூலிப்படையினர், ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது.
மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது.
உக்ரைன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவிகளை கொண்டு போரை எதிர்க்கொண்டு வருகிறது.
உக்ரைன் போரை எதிர்க்கொள்ள ரஷ்யா சார்பில் வாக்னர் கூலிப்படை களம் இறங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்இ ரஷ்யா சார்பில், களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப் படைகள் மீது ரஷ்ய இராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறது என வாக்னர் கூலிப்படை தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வாக்னர் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ரஷ்யாவின் தலைமையத்துவத்தை கவிழ்க்கஇ படையெடுப்போம். எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்ல. நீதிக்கான மாற்று வழி என வாக்னர் கூலிப்படை தலைவர் கூறியுள்ளார்.
ரஷ்யா சார்பாக உக்ரைனில் சண்டையிட்ட படைகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதலை அடுத்துஇ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
தலைநகர் மாஸ்கோவின் முக்கிய இடத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.
ரஷ்யாவின் முக்கிய பகுதிகளில் இராணுவ வாகனங்களை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிற்கு எதிராக படையெடுப்போம் எனக் கூறிய வாக்னர் படை குழு தலைவர் மீது ரஷ்யா வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ரஸ்யாவில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாகஇ அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.