பிரான்சு தமிழர் விளையாட்டுக்கழகம் 95 இன் இல்லங்களுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டிகள் 2023 கடந்த 18.06.20023 ஞாயிற்றுக்கிழமை கார்லே கோணேஸ் (95மாவட்டம்) பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடர், பிரெஞ்சு, தமிழீழ தேசியக்கொடி ஏற்றல் ஈகைச்சுடர், அகவணக்கம் மற்றும் கழகங்களின் கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றல், அணிவகுப்பு மரியாதைகளுடன் நடாத்தப்பட்டது.
இதில் பலநூறு குழந்தைகள் உற்சாகத்துடன் பங்குபற்றியிருந்தனர்.



















