அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! இன்றைய காலத்தின் அவசியமான எதிர்ப்பு ஒன்று கூடல் இது. தமிழர் எமது புரட்சிகர வரலாற்றில் பல்வேறு விடயங்களில் பலவற்றை தவறவிட்டு இன்று தவிக்கின்றோம்.
இது காலத்தின் அவசியமான தேவையான எதிர்ப்பு ஒன்றுகூடலாகும்.
நாம் செலவழிக்கு சில மணித்துளிகள் எமது இனத்தின் பெருவலிகளை உலகிற்கு தெரிவிக்கும் பெரும் வழிகளில் இதுவும் ஒன்றாகும். நாமும் பங்கு பற்றியும் எம்மவர்களையும் பங்கு கொள்ள வைப்போம்.
காலம்: 22.06.2023 வியாழக்கிழமை, மற்றும் 23.06.2023 வெள்ளிக்கிழமை Métro -Bourse ( Ligne(3) முன்பாக பி. பகல் 14:30 மணிக்கு
அனைத்து தமிழ் மக்களும் தேசபற்றுடன், தேச உணர்வுடன் பங்கு கொண்டு எமது நியாயத்தையும், உண்மையையும், இழந்ததற்கும், இழந்து கொண்டிருப்பதற்கு, இழக்கப்போவதையும் தடுத்து நிறுத்த பங்கெடுப்போம் வாருங்கள்.
இந்த தகவலையும் மற்றவர்களுக்கும் பகிர்வோம். நன்றி