வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய மகோற்சவம் இன்று (19.06.2023) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 15 நாட்கள் இடம்பெறும் உற்சவத்தில் 01.07.2023 சனிக்கிழமை சப்பரத் திருவிழாவூம் 02.07.2023 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் 03.07.2023 திங்கட்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.
இத்திருவிழாவில் கலந்து கொள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.