
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வீதியில் நேற்று மூன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்தமை உலகெங்கும் வாழ் நயினை பக்தர்களுக்கு மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

நாளை (19.06.2023) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் நயினைத் தாயின் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே நேற்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்து அற்புதத்தை நிகழ்த்திச்சென்றுள்ளன.

