
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் கிளவன்குளத்தில் வசிக்கும் நவரத்தினம் நவரூபன் என்பவரது வீட்டிற்கு கடந்த 14/06/2023 வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் 4 STF துணையுடன் சென்ற வனசீவராசிகள் திணைக்களத்தினர் ஏழுபேர் நவரூபனை கைதுசெய்து கொண்டுசென்று கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி நீதிமன்றில் முற்படுத்தி 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க முயன்றுள்ளனர்.
எனினும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்திரவதை செய்யப்பட்டு கடுங்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நவரூபன்
மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் திரு. செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்ட ஆலோசகர் காண்டீபன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார்கள்.