நேற்று கிளிநொச்சியில் வைத்துக் கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர் மூவர் மற்றும் சாரதி உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணித் தலைவி திருமதி வாசுகி சுதாகரன்
மகளீர் அணிச் செயலாளர் திருமதி கிருபா கிரிதரன்
யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் Sir
மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதி ஆகிய நால்வரும் கிளிநொச்சிப் பொலிசாரால் கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டனர். முன்னணியினர் சார்பில்
சிரேஸ்ர சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் மற்றும் சட்டத்தரணி கந்தசாமி மகிந்தன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி வாதங்களை முன்வைதிருந்தனர். இறுதியில் நான்குபேரும் பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதித்தார்.
நேற்று வியாழக்கிழமை மருதங்கேணி விவகாரம் விசாரணைகளுக்காக சென்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்
மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகர்
யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் மற்றும் சாரதி ஆகியோர் விசாரணைக்காக கிளிநொச்சி காவல் நிலையத்தில் வாக்கு மூலம் பெற்ற பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.