வவுனியா கன்னாட்டி பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே பலியான துயரம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்றதாய் ஒருவரும் அவரது 6 வயதான மகளுமே ஹென்டர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை சுமார் 7 மணியளவில் கன்னாட்டி பகுதியிலிருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காகக் காத்து நின்றுள்ளனர்.
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி சென்ற ஹெண்டர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரமாக நின்றவர்கள் மீது மோதித் தள்ளியுள்ளது.
அப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சிவலோகநாதன் சுபோகினி மற்றும் 6 வயதுடைய டினுசிகா என்ற சிறுமியுமே உயிரிழந்துள்ளனர்.
ஹெண்டர் வாகனத்தில் மூவர் வந்திருந்ததையடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற போது ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் பொறுமையிழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சரமாரியாகத் தாக்கியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டனர். இதனால் அப் பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன்
சம்பவஇடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பறையநாலங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…