நீரில் மூழ்கி நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞன் பலியான நிகழ்வு நெதர்லாந்து தமிழர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றையதினம் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பிக்க உதைபந்தாட்டம் மற்றும் படகுச்சவாரியில் ஈடுபட்ட வேளையில் தவறுதலாக பிரான்சில் இருந்து வந்தவர் நீரில் வீழ்ந்ததால் அவரைக் காப்பாற்ற நீரில் இறங்கிய தனுசன் அவரை படகில் ஏற்றிவிட்டு தவறுதலாக நீரில் மூழ்கியுள்ளார்.
அவரை அவருடன் சென்ற நண்பர்கள் தேடிய போதும் அவரைக் காணவில்லை. உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது மீட்புப் பணியாளர்களின் 90 நிமிட தேடுதலின் பின்னர் தனுசன் கண்டெடுக்கப்பட்டார். மீட்புப் பணியாளர்கள் அவனது உயிரை மீட்க போராடியும் அது தோல்வியில் முடிந்தது .
தனுசனின் இழப்பு நெதர்லாந்து தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவராலும் விரும்பத்தக்க இளைஞனாகவும் எடுத்துக்காட்டியாகவும் திகழ்ந்துள்ளார். இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அனைவராலும் பார்க்கப்படுகிறது . இவருடன் நீரில் மூழ்கிய மற்றவர் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர கூற்றின்படி காலநிலை அதிக வெப்பமாக இருந்தாலும் நீரின் வெப்பநிலை குறைந்தே காணப்படுகிறது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இளையவர்கள் நீர் நிலைகளில் கவனமாக இருக்க வேண்டும் தனுசன் இழப்பு எமக்கு பெரியதொரு பாடத்தை கற்றுத் தந்துள்ளது .