பிரான்சின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் மலையில் உள்ள அன்நேசி (Annecy) என்ற நகரில் நடந்த கத்திக்குத்தில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் அன்நேசி ஏரியில் உள்ள பூங்காவில் குழந்தைகள் உட்பட பலர் மீது கத்தியால் குத்தப்பட்டது. குழந்தைகளுக்கு மூன்று வயது இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Annecy என்பது Haute-Savoie இன் கிழக்குப் பகுதியில் உள்ள 135,000 மக்கள் வசிக்கும் நகரம்.
பாதுகாப்புப் படையினரின் விரைவான எதிர்வினைக்கு நன்றி. தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அரசியல் தஞ்சம் கோரிய சிரிய நாட்டவர் சிரிய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து பிரஞ்சு நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.