தமிழியல் பட்டக்கல்வி மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி!

0
316

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழியல் பட்டக்கல்விக்கான மேற்சான்றிதழ் நிலை நுழைவுத் தேர்வில் 27 மாணவர்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

.

இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்ச்சோலைகளில் 12 வரை தமிழ் மொழியை கற்ற இளந்தலைமுறையினரே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அருள்ராஜ் அஜிதன், ஜெயரூபன் துஷ்யந்தி இருவரும் 99 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளார்கள். ஜெயரூபன் துஷ்யந்தி Le Blanc Mesnil தமிழச்சோலை மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இணையவழித்தேர்விலும் இவர்களின் சாதனை போற்றுதற்குரியது. அதாவது அருள்ராஜ் அஜிதன் பகுதி1, பகுதி2, இரண்டிலும் 100 புள்ளிகளும், ஜெயரூபன் துஷ்யந்தி பகுதி 1ல் 100 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.

தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் ஐரோப்பிய மட்டத்தில் பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெருமளவில் இளந்தலைமுறையினர் தமிழில் பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
(Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence(bac+3)
மேலும் இப் பட்டப்படிப்பை படிக்க விரும்புபவர்கள் இவ் வருடம் யூன் மாதம் இறுதிநாள் வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த மாணவர்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here