தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று காலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் சிறப்புரிமைப் பிரச்சினை தொடர்பாக அவர் உரையாற்றுவதைத் தடுக்கும் நோக்கில் சிறிலங்கா காவல்துறை அவசர அவசரமாக அவரைக் கைது செய்துள்ளனர்.
தமிழ் மக்களின் உரிமைக்குரலை இரும்புக்கரம் கொண்டு நசுக்க முனையும் சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று பலரும் தமது எதிர்ப்புக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.