சற்று முன்னர் கொழும்பில் கஜேந்திரகுமார் எம்.பி. அதிரடியாக கைது..!

0
113

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வட தமிழீழம் ,  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (07.06.2023 ) காலை கொழும்பில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ள  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமரசமின்றி  தமிழர்களின்   ஆதரவு குரலாக சிறிலங்கா பாராளுமன்றத்தில்  செயல்படுபவராவார்   ஆகவே தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்கின்ற  கொள்கை  அடிப்படையில்  செயல்படும் முன்னணியின் அபரிமிதமான வளர்ச்சியை முடக்க சிங்கள அரசின் பகிரதபிரயத்தனமாகவே  பேரினவாத சிங்கள  அரசின்   திட்டமிட்ட  கைதாகவே இது அமைகின்றது    

குறித்த   கைதிற்கு பேரினவாத சிங்கள அரசு தெரிவிக்கும் காரணம் .?

அண்மையில்  வட  தமிழீழம் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று  சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.

பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையானால் வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்படும் என்றும் மன்று சுட்டிக்காட்டி இந்தக் கட்டளையை நேற்று வழங்கியது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here