பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை மற்றும் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடாத்திய மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள் இன்று 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கிறித்தை பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடரினை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி ஜெனனி அவர்கள் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.
இப்போட்டியில் உதைபந்தாட்டத்தில் மூன்று பிரிவு அணிகளாக 26 அணிகள் பங்குபற்றிய அதேவேளை துடுப்பெடுத்தாட்டத்தில் 23 அணிகளும் பங்கு பற்றியிருந்தன.
நிறைவாக வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள், பதக்கங்கள் வழங்கிவைக்கப்பெற்றன.
போட்டி முடிவுகள் :
உதைபந்தாட்டம்:
13வயதின்கீழ்
முதலாம்இடம்: F.C.93 விளையாட்டுக்கழகம்
இரண்டாம்: இடம் யாழ்டன் விளையாட்டுக்கழகம்
மூன்றாமிடம்: காவலூர்
விளையாட்டுக்கழகம்
சிறந்த விளையாட்டு வீரர்கள்
F.C.93 பத்தாம்இலக்கவீரர்,
யாழ்டன் பத்தாம் இலக்கவீரர்
15 வயதிற்கு கீழ்
முதலாம்இடம்: அரியாலை விளையாட்டுக்கழகம்
இரண்டாமிடம்: அக்கினி
விளையாட்டுக்கழகம்
மூன்றாமிடம்: நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம்
சிறந்த விளையாட்டு வீரர்கள்
அரியாலை வி.க. ஏழாம் இலக்கவீரர்,
அக்கினி வி.க. பத்தாம் இலக்கவீரர்
வளர்ந்தோர்பிரிவு
முதலாம்இடம்: F.C 93 விளையாட்டுக்கழகம் வெள்ளை
இரண்டாம் இடம்: யாழ்டன் விளையாட்டுக்கழகம்
மூன்றாமிடம்: F.C.93 விளையாட்டுக்கழகம் கறுப்பு
சிறந்தவிளையாட்டு வீரர்கள்
F.C.93 பதினோராம் இலக்கவீரர் யானு,
யாழ்டன் பன்னிரெண்டாம் இலக்க வீரர் கானு
இறுதியாட்ட நாயகன் F.C.93 ஏழாம் இலக்கவீரர் பிரசாந்
துடுப்பெடுத்தாட்டம்:
முதலாம்இடம்: எழிச்சி விளையாட்டுக்கழகம்
இரண்டாமிடம்: ஸ்கந்தா
விளையாட்டுக்கழகம்
மூன்றாமிடம்: கிங் மேக்கர்ஸ் விளையாட்டுக்கழகம்.
சிறந்த தூடுப்பாட்ட வீரர்
தயா (எழிச்சி வி.க.)
சிறந்த பந்து வீச்சாளர்
மோகன் (ஸ்கந்தா வி.க.)
சிறந்த தொடர் ஆட்ட வீரர்
தயா (எழிச்சி வி.க.)
இறுதி ஆட்ட நாயகன்
கோகுலன் (எழிச்சி வி.க.)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-ஊடகப்பிரிவு)