பிரான்சின் லூபுசே மாநகர முதல்வருடனான சந்திப்பு!

0
213

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான லூபுசே மாநகர முதல்வருடனான சந்திப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இச் சந்திப்பில் தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, லுபுசே பிராங்கோ தமிழ்ச்சங்கம் மற்றும் அந்த மாநகர மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் உதவி முதல்வர், மற்றும் 93 பகுதி பிரதேச சபையின் ஆலோசகர் திருமதி சுகுணா ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் இங்கு வாழும் மக்களின் வாழ்வு, கல்வி, கலைபண்பாடு கலாசாரம், விளையாட்டு, அரசியல் தேவைகள் பற்றிப் பேசப்பட்டது. இதில் அப்பிரதேச வாழ் வர்த்தகர்களின் நிலவரம் பற்றியும் கேட்டறிந்து கொண்டார். தமிழர் தரப்பால் பிரான்சில் வாழும் தமிழ்மக்களின் அரைநூற்றாண்டு வாழ்வும் அவர்களின் குழந்தைகள் இன்று பலதுறைகளில் கல்வி கற்று சிறந்தவர்களாக வாழ்வதையும் அவர்களின் நல்ல வாழ்வுக்கு தாய் மொழிக்கல்வி அதனை நடாத்தும் தமிழ்ச்சோலைகள், தமிழ்ச்சங்கங்கள் பெரும் உறுதுணையாக இருந்ததையும் பரப்புரைப் பொறுப்பாளரால் தெளிவு படுத்தப்பட்டது. அதற்கு அனைத்து மாநகரம் மற்றும் முதல்வர்கள் பக்கபலமாக இருப்பதையும் கூறப்பட்டது.


முதல்வரும் அயல்நகரத்தில் தமிழர்தாயகத்தின் நினைவுக்கல் எழுப்பப்பட்டதையும் தானும் அதற்கு சென்று வணக்கம் செய்ததையும் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதையும் கூறியிருந்தார். இங்கு வாழும் மக்களின் தேவையை எதிர்பார்ப்பை சகோதரி சுகுணா அவர்கள் பிரெஞ்சு மொழியில் கூறியிருந்தார். சந்திப்பின் முடிவில் தமிழ்மக்கள் சார்பாக தமிழ்ச்சங்கம் மலர்க்கொத்தினையும், தமிழீழத் தேசிக்கொடியினையும் வழங்கியிருந்தார். அதனை அவர்கள் பெருவிருப்பத்துடன் பெற்றுக்கொண்டனர். முதற்சந்திப்பு நல்லமுறையில் நிறைவுபெற்றது. இதில் பெற்றோர்கள்,இளையோர்களும் கலந்து கொண்டது சிறப்புக்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here