முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த மே 18 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 16.00 மணிக்கு துலுஸ் மாநகரத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் துலுஸ் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் துலுஸ் வாழ் தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியதுடன், தமிழீழத் தேசியக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு கோசம் எழுப்பினர்.
வெளிநாட்டு மக்களுக்கு பிரெஞ்சு மொழியிலான துண்டுப்பிரசுரங்களும் மாணவர்களால் வழங்கப்பட்டன.












