முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் கடந்த புதன்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு வெர்சைல் நகரத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் வெர்சைல் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. ஈகைச்சுடரினை 1998 அன்று மாங்குளம் பகுதியில் வீரச்சாவடைந்த மேஜர் உதயகுமார் அவர்களின் சகோதரன் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் வெர்சைல் தமிழ்சசங்க உறுப்பினர்கள் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.





































(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)