பிரான்சு புளோமெனில் நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்!

0
166

மே 18 தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரான்சு புளோமெனில் நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபிப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு உணர்வோடு இடம்பெற்றது.

பொதுச்சுடரினை தாயக மண் மீட்பு போரில் 06-03-2008 அன்று மன்னார் விளாத்தி காட்டில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட கப்டன் கரிகாலன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைக்க

ஈகைச்சுடரினை
முள்ளிவாய்கால் இனவழிப்பில் கொல்லப்பட்ட திருநீலகண்டர் பரராஜசிங்கம் அவர்களின் மகன் ஏற்றிவைத்தார்.

நினைவுத்தூபிக்கான சுடரினை செனட்டர் திரு .தியறி மேனியோண் அவர்களும்
மாநகர முதல்வர் திரு .யோண் பிலிப் றோங்கே
அவர்களும் ஏற்றிவைத்தனர்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுத்தூபிக்கான மவர்வணக்கத்தை செனட்டர் திரு .தியறி மேனியோண் ,
மாநகர முதல்வர் திரு .யோண் பிலிப் றோங்கே,
நகரசபை உறுப்பினர் திரு.கிங்ஸ்ரன் ,
மற்றும் நகரசபை சார்ந்த பிரதிநிதிகள் செலுத்தியிருந்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரூம் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

நினைவுரைகளை செனட்டர் திரு .தியறி மேனியோண் அவர்களும் மாநகர முதல்வர் திரு .யோண் பிலிப் றோங்கே அவர்களும் ஆற்றியிருந்தனர்.

நன்றியுரையினை
புளோமெனில் நகரசபையின் உறுப்பினர் திரு. கிங்ஸ்ரன் அவர்கள் ஆற்றியிருந்தார்.

நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு ஆண் பெண் பச்சிளங்குழந்தைகள் என வயது வேறுபாடின்றி ..
வைத்தியசாலை மத வழிபாட்டு தலங்கள் என உலக யுத்த வரம்புகளை மீறி நச்சு குண்டுகளையும் வீசி பாதுகாப்பு வலயம் என்று எம்மக்களை குறுகிய நிலப்பரப்புக்குள் அடைத்து வைத்து மனிதநேயத்தை மறந்து எம் உறவுகளை துடி துடிக்க இனவாத அரசு கொன்றொழித்த இனவழிப்பு நாளின் 14 வது ஆண்டிது…
முள்ளிவாய்க்கால் என்பது தமிழரின் வீரம் செறிந்த மண்டியிடாத மாவீரத்தின் மகிமையையும் எம்மின மக்களின் இனவழிப்பின் உச்ச செய்தியையும் உலக நாடுகளுக்கும் ,ஐநா சபைக்கும் சொல்லி சென்றது..
உங்களால் மட்டுமே எங்களுக்கான நீதியை பெற்று தர முடியும் என்று நம்பி நிற்கிறது…
ஒர் இனமாய் உலகெங்கும் திரண்டு மாவீர கண்மணிகளையும் எம்மின மக்களையும் நினைவில் நிறுத்தி இன்று வரை தமிழர் தேச விடுதலைக்காய் போராடுகிறது..

புளோமெனில் நகரசபையானது எம்மின மக்களின் தார்மீக கோரிக்கைகளை செவிமடுத்து எங்களோடு என்று கரம் கோர்த்து நிற்கிறது..

செனட்டர் திரு .தியறி மேனியோண்
மாநகர முதல்வர் திரு .யோண் பிலிப் றோங்கே
சிறுவர் பராமரிப்பகத்தின் பணிப்பாளர் சில்வி விஜோலே (புளோமெனில் நகரசபை)
நகரசபை உறுப்பினர் திரு.கிங்ஸ்ரன்
மற்றும் நகரசபை சார்ந்த பிரதிநிதிகள் ,புளோமெனில் வாழ் மக்கள்,மாணவ செல்வங்கள்,தமிழ் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள், தமிழ் உறவுகள் என நாம் யாவரும் கூடி நிற்கிறோம் இனவழிப்பு நாளை நினைவேந்தி எம் உறவுகளையும் வீர மறவர்களையும் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செய்வதற்காக…
இந்த இனவழிப்பு தூபியின் சிறப்பு யாதெனில் முள்ளிவாய்காலில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் இங்கே வைக்கப்பட்டுள்ளது.
அந்த மண்ணின் வரலாறு தான் தமிழர் தேசத்தை கட்டியெழுப்பும் என்னும் தளராத உறுதியை தமிழினம் ஏற்று நிற்கிறது ..என புளோமெனில் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

.

:


….


8)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here